மேட்டுப்பாளையம், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான "வாழ்க்கை திறன் மேம்பாட்டு திட்டம்" குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாலதி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், பனிரண்டாம் வகுப்பு பயிலும் 54 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு இவருடைய சொந்த செலவில் பரிசுப் பொருட்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா, பள்ளியின் ஆசிரியர் கழக தலைவர் பாட்ஷா, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர்கள் ஆனந்த் மற்றும் பாரத் அவர்கள் சிறப்பாக நடத்தினர். இந்நிகழ்வை வழக்கறிஞர் ரஹ்மான் ஒருங்கிணைத்தார்.